Sunday, December 12, 2010

Thovaramparuppu chatney

தேவையானவை:
துவரம்பருப்பு 1 கப்
காஞ்ச மிளகாய் 8 -10
ஜீரகம் 2 சம்சா
கடுகு 1 சம்சா
துருவிய தேங்காய் 1 /4 கப் 
புளி ஒரு நெல்லிக்காய் அளவு
உப்பு
கருவேப்பிலை 1 ஈர்க்கு


 செய்முறை : துவரம்பருப்பை எண்ணைவிடாமல் சிகப்பாகும்வரை வானலியில் வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். பிறகு வானலியில் ஒரு சம்சா எண்ணெய் விட்டு கருவேப்பிலை,   ஜீரகம், காஞ்ச மிளகாயை வறுக்கவும், இதனுடன், துருவிய தேங்காய், புளி, உப்பு, வருத்த துவரம்பருப்பு சேர்த்து mixi இல் நன்றாக அரைக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தளர்திக்கொள்ளவும்.

Kondakadalai Masala (Chappathi Side dish)

தேவையானவை:
கொண்டக்கடலை 1 கப்
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
இஞ்சி சின்ன துண்டு
பூண்டு 2
ஜீரகம் 1 சம்சா
கருவேப்பிலை 2 ஈர்க்கு
சாட் மசாலா 1 சம்சா
பச்சை மிளகாய் 4



செய்முறை: கொண்டக்கடலையை 6 -8 மணிநேரம் தண்ணீரில் ஊறவைதுக்கொள்ளவும்.  குக்கரில் 3  சம்சா எண்ணெய் விடவும், அதனுடன்  பூண்டு சேர்த்து தாளிக்கவும்.  பிறகு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும், கடைசியாக, ஜீரகம் சேர்க்கவும்.  இதனுடன், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து கொஞ்சம் வதக்கவும்.  பிறகு கொண்டைகடலை, சாட் மசாலா, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விடவும்.  குக்கர் ஆரிய பிறகு, அதில் உள்ள கொண்டைகடலை சிலதை கரண்டியால் நசுக்கிவிட்டு  2  நிமிடம் வேகவைக்கவும்,  நசுக்குவதால் thick gravy பதம் கிடைக்கிறது.  இதனை சப்பாத்திக்கு சைடு dish ஆகா பயன்படுத்தலாம்.

Sunday, December 5, 2010

Dhil(Sapsige Soppu/Savaa) Keerai Bonda

தில் / சப்சிகே சொப்பு போண்டா:
தில் ஒரு நல்ல spice , எனவே நல்ல மனமுடன் இருக்கும்.  இதனை உட்கொள்வதால் சில வயிற்று உபாதைகள் நீங்கும்.

தேவையானவை:
பொடியாக நறுக்கிய தில் 1 /2 கட்டு
கடலை பருப்பு 1 கப் (10௦-15 போண்டா கிடைக்கும்)
பச்சைமிளகாய் 2 -3
பெரிய வெங்காயம் 1
இஞ்சி சின்ன துண்டு

செய்முறை:
கடலை பருப்பை 3 -4 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.  தில் இலை, பெரியவெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிகொள்ளவும். 
ஊறவைத்த கடலையை Coarse ஆகா தண்ணீர்விடாமல் அரைக்கவும்.  இதனுடன் பொடியாக நறுக்கிவைத்த தில் இலை, பெரியவெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும்.  தேவைப்பட்டால் மிளகாய் போடி சேர்த்து காரமாக்கிகொள்ளலாம். 
பிறகு கையில் சிறிதாக உருட்டிக்கொண்டு வடைபோல் நடுவில் தட்டி எண்ணெயில் போட்டு இருபுறமும் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:  இந்த வடை ஆரியபின்பும் ஒரு தனி சுவையாக இருக்கும்.

Bell Pepper Chutney

சிவப்பு கொடைமிளகாய் சட்னி:
தேவையானவை:
நறுக்கிய கொடைமிளகாய் 2
காஞ்ச மிளகாய் 8 -10
இஞ்சி சின்ன துண்டு
பூண்டு 3 -4 துண்டு
புளி (ஒரு நெல்லிக்காய் அளவு)
சீரகம் 1 சம்சா
கடுகு 1 சம்சா
தாளிக்க தேவையனாளவு
கருவேப்பிலை ஒரு கீற்று
எண்ணெய்
தேங்காய் ஒரு கீத்து

செய்முறை:

முதலில் பூண்டை எண்ணெய் விட்டு வதக்கிகொள்ளவும்.  அதனுடன் சீரகம், காஞ்ச மிளகாய் போட்டு வதக்கவும்.  அதனுடன் நறுக்கிய சிவப்பு கொடைமிளகாய் போட்டு, கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஒரு நிமிடம் மட்டும் வேகவைக்கவும்.  ஆறியபிறகு, அதனுடன் தேங்காய், இஞ்சி, புளி மற்றும் உப்பு சேர்த்து mixi  ல் நன்கு அரைக்கவும்.  அரைத்த விழுதின்மேல்  கடுகு, ஜீரகம், கருவேப்பிலை தாளித்துக்கொட்டவும், சுவையான Iron rich சட்னி ரெடி.

Kodubale



தேவையானவை,
1 அரிசி மாவு 3 கப்
2  மைதா 1 /4 கப்
3  துருவிய தேங்காய் 1 /2 கப்
4 கருவேப்பிலை 3 ஈர்க்கு
5 கொத்தமல்லி இலை 3 ஈர்க்கு
6 ஜீரகம் 2 சம்சா
7 ஓமம் 1 சம்சா
8 காஞ்ச மிளகாய் 10
9 வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு
10 பெருங்காயபொடி  1 /2 சம்சா
11 உப்பு
12  எண்ணெய்

செய்முறை: மைதாவை வேட்டில்வைத்து (Steam  boiling ) எடுத்துகொள்ளவும்.  கருவேப்பிலை, ஜீரகம், காஞ்ச மிளகாயை 2 ஸ்பூன் எண்ணெய்விட்டு தாளித்துகொள்ளவும். இதனுடன் தேங்காய் மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து அரைக்கவும். 
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,  மைதா, வெண்ணை, பெருங்காயபொடி, உப்பை எடுத்துக்கொண்டு அதனுடன் அரைத்த விழுது  மற்றும் தண்ணீர் சேர்க்கவும் (கிட்டதட்ட சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்).  பிறகு, சின்ன சின்ன உருண்டையாக்கி அதனை நீளமாக உருடிக்கொள்ளவும்(படத்தை பார்க்க ), பிறகு வலயம்போல் செய்து அதனை எண்ணையில் பொரித்துக்கொள்ளவும்.  பொரிக்கும்போது lowflame வைத்து திருப்பிபோட்டு பொரிக்கவும்.

Sunday, November 21, 2010

Stuffed Chappathi




தேவையானவை:
கோதுமை மாவு
தண்ணீர் 4 சின்ன கப்
உப்பு

For Stuffing :
பொடியாக நறுக்கிய (உருளை கிழங்கு சின்னது 2
பெரிய வெங்காயம் சின்னது 1
பச்சைமிளகாய் 3
கொத்தமல்லி 1 /2 கட்டு
இஞ்சி சின்ன துண்டு)
Chat மசாலா 1 சம்சா

    Stuffing பூர்ணம் செய்வது:  உருளை கிழங்கை தண்ணீரில் வேகவைக்கவும்.  அதன் தோலை     உரித்து நன்றாக பிசைந்துகொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய   பச்சைமிளகாய்,  பெரிய வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, தேவையான அளவு உப்பு  மற்றும் Chat மசாலா சேர்த்து பிசைந்து வைத்துகொள்ளவும்.

  சப்பாத்தி செய்வது: பாத்திரத்தில் தண்ணீர்(4 கப்) ஊற்றி, அதனுடன் உப்பு மற்றும் ஒரு சம்சா எண்ணெய் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.  அடுப்பை அணைத்துவிட்டு, கொதிக்கும் தண்ணீரில் கோதுமைமாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டியின் பின்முனையை வைத்து கலக்கிக்கொண்டுவரவும், ரொம்பவும் கெட்டியாக இருக்காதபடி பார்த்துக்கொள்ளவும்.  சாதரணமாக சப்பாத்தி செய்ய பயன்படுத்தும் உருண்டையில் பாதியளவில் உருண்டையை உருடிக்கொள்ளவும்.  அதனை சப்பாத்தியாக இட்டு அதன்மேல் Stuffing பூரணத்தை பரப்பிகொள்ளவும்.  அதன்மேல் இன்னொரு சப்பாத்தியை வைக்கவும். பிறகு இரண்டு சப்பாத்தியின் ஓரங்களை கையால் ஒட்டிவிடவும். பிறகு எப்போதும்போல் சப்பாத்திக்கல்லில் இட்டு எண்ணெய் ஊற்றி திருப்பிபோட்டு  வேகவைத்து எடுக்கவும்.

Sunday, November 14, 2010

karnataka style Arisi Roti

தினம் ராத்திரி என்ன டிபன் செய்யலாம் என யோசிகரவங்களுக்கு அரிசி ரொட்டி ஒரு புது மற்றும் வேகமாக செய்யகூடிய ஒன்னு.  பொதுவா அரிசிமாவுல ரொட்டி செஞ்சா கொஞ்சம் கெட்டியா இருக்கும், ஆனா அவுல் சேத்து செஞ்சா நல்ல மெது மெதுன்னு சுவையா சாப்பிட சூப்பரா இருக்கும்.

தேவையானவை:
பொடியா நறுக்கிய
பெரிய வெங்காயம் (1 ),
கொத்தமல்லி இலை (இல்லைனா மென்தியா ) பாதி கட்டு, 
பச்சமுளகாய் (4 )
(வேணும்னா தேங்காயை   பொடியா நறுக்கி போடலாம் ),
கடலை / ஆலிவ் எண்ணெய் (1 /4 கப்),
சீரகம் 2 spoon
அவுல்(1 /4 கப்), உப்பு தேவையான அளவு மற்றும்
பச்சரிசி மாவு ~ 2  கப்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிகொள்ளவும், அதனுடன் சீரகம் சேர்த்து வதக்கவும்.  பிறகு பொடியா நறுக்கிய (பெரிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சமுளகாய்) சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும் ( ~ 30௦ விநாடிகள்). அதனுடன் 2  கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும், இப்போது தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.  அதில் உள்ள கொதிக்கும் தண்ணீரில் அவுல் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவைக்கவும்.

பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்தவுடன்,   அரிசி மாவை சேர்த்து கரண்டியை வைத்து பிசையவும்.  பிசைந்த மாவு கெட்டியாகவும் அதேசமயத்தில் கையில் கொஞ்சம் ஒட்டும்படியகவும் இருக்கணும் (சப்பாத்தி மாவு பிசஞ்சமாதிரி), இந்த பதம் வர கிட்டதட்ட 2  கப் மாவு தேவைப்படும்.

இவ்வாறு பிசைந்த மாவை 15 நிமிடம் வரை வைத்திருக்கலாம், அதற்குமேல் வைத்தால் வெங்காயம் தண்ணீர் விட்டு மாவு இளகிவிடும்.  இப்போது சப்பாத்தி உருண்டை அளவில் உருட்டிகொள்ள  வேண்டும்(கீழ் உள்ள படத்தை பார்க்கவும்), இந்த உருண்டையை எண்ணெய் தடவிய polythene கவரில் வைத்து கை விரல்களால் தோசை போன்று தட்டி பரப்ப வேண்டும், ஒரு விரலால் அங்கும் இங்கும்மாக நான்கு இடங்களில் துளைஇடவும்(படத்தை பார்க்கவும்).  தட்டும்போது கையில் ஒட்டினால் விரல்களை தண்ணீரில் நனைதுக்கொள்ளவும்.

பின்னர் polythene கவரிலிருந்து கைக்கு மாற்றி, அதனை தோசை கல்லில் இட்டு எண்ணெய்விட்டு தோசைபோல் திருபிஎடுக்கவும்.  முக்கியமாக எண்ணெய்யை அந்த நான்கு துளைகளில் விடவும்.  மெது மெது அரசி ரோடி தயார்.  தொட்டுக்க  சட்னி அல்லது வெண்ணை கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.