Sunday, November 21, 2010

Stuffed Chappathi




தேவையானவை:
கோதுமை மாவு
தண்ணீர் 4 சின்ன கப்
உப்பு

For Stuffing :
பொடியாக நறுக்கிய (உருளை கிழங்கு சின்னது 2
பெரிய வெங்காயம் சின்னது 1
பச்சைமிளகாய் 3
கொத்தமல்லி 1 /2 கட்டு
இஞ்சி சின்ன துண்டு)
Chat மசாலா 1 சம்சா

    Stuffing பூர்ணம் செய்வது:  உருளை கிழங்கை தண்ணீரில் வேகவைக்கவும்.  அதன் தோலை     உரித்து நன்றாக பிசைந்துகொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய   பச்சைமிளகாய்,  பெரிய வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, தேவையான அளவு உப்பு  மற்றும் Chat மசாலா சேர்த்து பிசைந்து வைத்துகொள்ளவும்.

  சப்பாத்தி செய்வது: பாத்திரத்தில் தண்ணீர்(4 கப்) ஊற்றி, அதனுடன் உப்பு மற்றும் ஒரு சம்சா எண்ணெய் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.  அடுப்பை அணைத்துவிட்டு, கொதிக்கும் தண்ணீரில் கோதுமைமாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டியின் பின்முனையை வைத்து கலக்கிக்கொண்டுவரவும், ரொம்பவும் கெட்டியாக இருக்காதபடி பார்த்துக்கொள்ளவும்.  சாதரணமாக சப்பாத்தி செய்ய பயன்படுத்தும் உருண்டையில் பாதியளவில் உருண்டையை உருடிக்கொள்ளவும்.  அதனை சப்பாத்தியாக இட்டு அதன்மேல் Stuffing பூரணத்தை பரப்பிகொள்ளவும்.  அதன்மேல் இன்னொரு சப்பாத்தியை வைக்கவும். பிறகு இரண்டு சப்பாத்தியின் ஓரங்களை கையால் ஒட்டிவிடவும். பிறகு எப்போதும்போல் சப்பாத்திக்கல்லில் இட்டு எண்ணெய் ஊற்றி திருப்பிபோட்டு  வேகவைத்து எடுக்கவும்.

No comments:

Post a Comment