Sunday, December 5, 2010

Kodubale



தேவையானவை,
1 அரிசி மாவு 3 கப்
2  மைதா 1 /4 கப்
3  துருவிய தேங்காய் 1 /2 கப்
4 கருவேப்பிலை 3 ஈர்க்கு
5 கொத்தமல்லி இலை 3 ஈர்க்கு
6 ஜீரகம் 2 சம்சா
7 ஓமம் 1 சம்சா
8 காஞ்ச மிளகாய் 10
9 வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு
10 பெருங்காயபொடி  1 /2 சம்சா
11 உப்பு
12  எண்ணெய்

செய்முறை: மைதாவை வேட்டில்வைத்து (Steam  boiling ) எடுத்துகொள்ளவும்.  கருவேப்பிலை, ஜீரகம், காஞ்ச மிளகாயை 2 ஸ்பூன் எண்ணெய்விட்டு தாளித்துகொள்ளவும். இதனுடன் தேங்காய் மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து அரைக்கவும். 
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,  மைதா, வெண்ணை, பெருங்காயபொடி, உப்பை எடுத்துக்கொண்டு அதனுடன் அரைத்த விழுது  மற்றும் தண்ணீர் சேர்க்கவும் (கிட்டதட்ட சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்).  பிறகு, சின்ன சின்ன உருண்டையாக்கி அதனை நீளமாக உருடிக்கொள்ளவும்(படத்தை பார்க்க ), பிறகு வலயம்போல் செய்து அதனை எண்ணையில் பொரித்துக்கொள்ளவும்.  பொரிக்கும்போது lowflame வைத்து திருப்பிபோட்டு பொரிக்கவும்.

No comments:

Post a Comment