Sunday, December 12, 2010

Kondakadalai Masala (Chappathi Side dish)

தேவையானவை:
கொண்டக்கடலை 1 கப்
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
இஞ்சி சின்ன துண்டு
பூண்டு 2
ஜீரகம் 1 சம்சா
கருவேப்பிலை 2 ஈர்க்கு
சாட் மசாலா 1 சம்சா
பச்சை மிளகாய் 4



செய்முறை: கொண்டக்கடலையை 6 -8 மணிநேரம் தண்ணீரில் ஊறவைதுக்கொள்ளவும்.  குக்கரில் 3  சம்சா எண்ணெய் விடவும், அதனுடன்  பூண்டு சேர்த்து தாளிக்கவும்.  பிறகு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும், கடைசியாக, ஜீரகம் சேர்க்கவும்.  இதனுடன், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து கொஞ்சம் வதக்கவும்.  பிறகு கொண்டைகடலை, சாட் மசாலா, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விடவும்.  குக்கர் ஆரிய பிறகு, அதில் உள்ள கொண்டைகடலை சிலதை கரண்டியால் நசுக்கிவிட்டு  2  நிமிடம் வேகவைக்கவும்,  நசுக்குவதால் thick gravy பதம் கிடைக்கிறது.  இதனை சப்பாத்திக்கு சைடு dish ஆகா பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment