Sunday, December 5, 2010

Dhil(Sapsige Soppu/Savaa) Keerai Bonda

தில் / சப்சிகே சொப்பு போண்டா:
தில் ஒரு நல்ல spice , எனவே நல்ல மனமுடன் இருக்கும்.  இதனை உட்கொள்வதால் சில வயிற்று உபாதைகள் நீங்கும்.

தேவையானவை:
பொடியாக நறுக்கிய தில் 1 /2 கட்டு
கடலை பருப்பு 1 கப் (10௦-15 போண்டா கிடைக்கும்)
பச்சைமிளகாய் 2 -3
பெரிய வெங்காயம் 1
இஞ்சி சின்ன துண்டு

செய்முறை:
கடலை பருப்பை 3 -4 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.  தில் இலை, பெரியவெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிகொள்ளவும். 
ஊறவைத்த கடலையை Coarse ஆகா தண்ணீர்விடாமல் அரைக்கவும்.  இதனுடன் பொடியாக நறுக்கிவைத்த தில் இலை, பெரியவெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும்.  தேவைப்பட்டால் மிளகாய் போடி சேர்த்து காரமாக்கிகொள்ளலாம். 
பிறகு கையில் சிறிதாக உருட்டிக்கொண்டு வடைபோல் நடுவில் தட்டி எண்ணெயில் போட்டு இருபுறமும் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:  இந்த வடை ஆரியபின்பும் ஒரு தனி சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment