Sunday, November 14, 2010

karnataka style Arisi Roti

தினம் ராத்திரி என்ன டிபன் செய்யலாம் என யோசிகரவங்களுக்கு அரிசி ரொட்டி ஒரு புது மற்றும் வேகமாக செய்யகூடிய ஒன்னு.  பொதுவா அரிசிமாவுல ரொட்டி செஞ்சா கொஞ்சம் கெட்டியா இருக்கும், ஆனா அவுல் சேத்து செஞ்சா நல்ல மெது மெதுன்னு சுவையா சாப்பிட சூப்பரா இருக்கும்.

தேவையானவை:
பொடியா நறுக்கிய
பெரிய வெங்காயம் (1 ),
கொத்தமல்லி இலை (இல்லைனா மென்தியா ) பாதி கட்டு, 
பச்சமுளகாய் (4 )
(வேணும்னா தேங்காயை   பொடியா நறுக்கி போடலாம் ),
கடலை / ஆலிவ் எண்ணெய் (1 /4 கப்),
சீரகம் 2 spoon
அவுல்(1 /4 கப்), உப்பு தேவையான அளவு மற்றும்
பச்சரிசி மாவு ~ 2  கப்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிகொள்ளவும், அதனுடன் சீரகம் சேர்த்து வதக்கவும்.  பிறகு பொடியா நறுக்கிய (பெரிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சமுளகாய்) சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும் ( ~ 30௦ விநாடிகள்). அதனுடன் 2  கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும், இப்போது தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.  அதில் உள்ள கொதிக்கும் தண்ணீரில் அவுல் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவைக்கவும்.

பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்தவுடன்,   அரிசி மாவை சேர்த்து கரண்டியை வைத்து பிசையவும்.  பிசைந்த மாவு கெட்டியாகவும் அதேசமயத்தில் கையில் கொஞ்சம் ஒட்டும்படியகவும் இருக்கணும் (சப்பாத்தி மாவு பிசஞ்சமாதிரி), இந்த பதம் வர கிட்டதட்ட 2  கப் மாவு தேவைப்படும்.

இவ்வாறு பிசைந்த மாவை 15 நிமிடம் வரை வைத்திருக்கலாம், அதற்குமேல் வைத்தால் வெங்காயம் தண்ணீர் விட்டு மாவு இளகிவிடும்.  இப்போது சப்பாத்தி உருண்டை அளவில் உருட்டிகொள்ள  வேண்டும்(கீழ் உள்ள படத்தை பார்க்கவும்), இந்த உருண்டையை எண்ணெய் தடவிய polythene கவரில் வைத்து கை விரல்களால் தோசை போன்று தட்டி பரப்ப வேண்டும், ஒரு விரலால் அங்கும் இங்கும்மாக நான்கு இடங்களில் துளைஇடவும்(படத்தை பார்க்கவும்).  தட்டும்போது கையில் ஒட்டினால் விரல்களை தண்ணீரில் நனைதுக்கொள்ளவும்.

பின்னர் polythene கவரிலிருந்து கைக்கு மாற்றி, அதனை தோசை கல்லில் இட்டு எண்ணெய்விட்டு தோசைபோல் திருபிஎடுக்கவும்.  முக்கியமாக எண்ணெய்யை அந்த நான்கு துளைகளில் விடவும்.  மெது மெது அரசி ரோடி தயார்.  தொட்டுக்க  சட்னி அல்லது வெண்ணை கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.




No comments:

Post a Comment